தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆலியா மானசா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு ஓய்வில் இருந்த இவர் குழந்தை ஓரளவிற்கு வளர்ந்ததை ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமானதும் பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகினார்.
தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவது மட்டுமல்லாமல் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு கண்டென்ட் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனது மாமியாருக்கு அல்வா செய்து கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சஞ்சீவ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் நடிக்க வாங்க என்று கூறி வருகின்றனர்.
