தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நாகார்ஜுனாவின் மூத்த மகனான இவர் பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகை சமந்தாவை பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் மட்டுமே நிலைத்தது. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதே சமயம் கல்யாண பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்க கூடாது என கண்டிசன் போட பெற்றோரும் அதற்கு ஓகே சொல்லி பெண்ணையும் பார்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
