தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க செல்வராகவன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நெல்சன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நாளை என ஒரே வார்த்தையில் ட்வீட் செய்திருந்தார்.
இதனால் இன்று பீஸ்ட் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
