Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

RRR படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

RRR First Day Collection Details

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. பாகுபலி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது இயக்கத்தில் RRR என்ற திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் உட்பட எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் முதல்நாளில் மட்டும் உலக அளவில் ரூபாய் 257.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.120.19 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ.25.14 கோடி ரூபாய், கர்நாடகாவில் ரூ.16.48 கோடி ரூபாய் கேரளாவில் ரூ.4.36 கோடி ரூபாய், தமிழகத்தில் ரூ.12.73 கோடி, வெளிநாடு உள்பட மற்ற இடங்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல் நாளில் மட்டும் ரூபாய் 257.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

RRR First Day Collection Details
RRR First Day Collection Details