Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணன் நாடகத்தால் அதிர்ச்சியான சிவகாமி.. அர்ச்சனா செய்த வேலை.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

Raja Rani 2 Serial Episode Update 17.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இந்தப் பக்கம் சரவணன், சக்கரை, மயிலு ஆகியோர் நாடகத்துக்கு ஒத்திகை பார்க்க அங்கு வந்த சந்தியா இவர்கள் மீது சந்தேகப்படும் ஆனால் சரவணன் உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

அதன் பிறகு வீட்டில் எல்லோரும் கைக்கு மருதாணி போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு வந்து அமர்ந்த அர்ச்சனா ஒரே வெக்கையா இருக்கு என சொல்லி பேன் போடப்போவதாக எழுந்து செல்லும் போது ஏடிஎம் கார்டை கீழே போட்டுவிட்டு சென்று விடுகிறார். பிறகு இதை பார்த்த சிவகாமி என்னது அட்டை எனக் கேட்க சந்தியா இது சரவணனுடைய ஏடிஎம் கார்டு என கூறி வாங்கிக் கொள்கிறார்.

அர்ச்சனா நல்லது நம்ப மேல சந்தேகம் வரவில்லை என நிம்மதி அடைகிறார். அதன்பிறகு சந்தியா ரூமுக்குள் இருக்க கையில் மருதாணி வைத்து இருப்பது தெரியாமல் முகம் எல்லாம் பூசிக் கொள்கிறார். அதன்பிறகு அங்கு வந்த சரவணன் அதை துடைத்து விட கொஞ்சம் இருவருக்குமிடையே ரொமான்ஸ் நடக்கிறது.

அதற்கு அடுத்ததாக எல்லோரும் நாடகம் நடக்கும் இடத்திற்கு செல்ல வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கெட்டப்பில் வந்து இருப்பதை பார்த்து சிவகாமி அதிர்ச்சி அடைகிறார். கோவலன் கண்ணகி கதையை நடித்து காட்டுகின்றனர்.

மயிலு கண்ணகியாக நடிக்க சரவணன் அவரை சந்தியா போல பாவித்து பார்த்த சந்தியா நடிப்பது போலவே அவருக்கு தெரிகிறது. ‌ என் கணவன் கள்வன் இல்லை என சந்தியா வாதாடி வெற்றி பெறுகிறார். நீதி தவற இருந்த அரசர் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. ‌‌ ‌

Raja Rani 2 Serial Episode Update 17.03.22
Raja Rani 2 Serial Episode Update 17.03.22