Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செழியன் ஜெனிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை.. செழியனை அடிக்கப் பாய்ந்த எழில்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 10.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி என் அப்பா பணத்தைக் கொடுக்க இந்த பணம் மட்டும் வேண்டாம் ஜெனிக்கு ஏதாவது தேவை இருந்தால் நான் கொடுத்து விடுகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் செழியன். இந்த பக்கம் பாக்கியா கல்யாண ஆர்டர் ஒன்றை எடுக்கிறார். 500 பேருக்கு சமைக்க கஷ்டம் என செல்வி சொல்ல பண தேவை அதிகமாக இருக்கிறது அதனால் சமாளித்து தான் ஆக வேண்டும் என பாக்கியா முடிவு செய்கிறார்.

அதற்கு அடுத்ததாக வீட்டுக்கு வந்த செழியன் ஜெனியிடம் உங்க வீட்டில பணம் கேட்ட யார் எனக்கேட்க முதலில் அவர் புரியல என கூறுகிறார். பிறகு உங்க வீட்ல ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டியா என செழியன் கேட்கிறார். அம்மா எனக்கு தேவைப்பட்டது அதனால கேட்டேன் என ஜெனி சொல்கிறார். உனக்கு அப்படி என்ன தேவை இருக்கு ஏதாவது என்கிட்ட கேட்க வேண்டியது தானே என கேட்க எங்கப்பா கிட்ட நான் கேட்கிறேன் அதுல உனக்கு என்ன பிரச்சனை என ஜெனி கூறுகிறார்.

எனக்கு அசிங்கமா இருக்கு அவர் எதுக்கு என்கிட்ட பணம் தரனும்? உன் கிட்ட பணம் கொடுத்துதான் பிரச்சினையை சரி நானே வாங்கிக்கறேன் என ஜெனி கூறுகிறார். மேலே சத்தம் போடுவதை பார்த்த பாக்கியா ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஏன் சத்தம் போடுறீங்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆண்ட்டி என ஜெனி சொல்கிறார். பிறகு அவர் கீழே இறங்கி வர செழியனும் கீழே இறங்கி வருகிறார்.

என்ன பிரச்சனை எதுக்கு சத்தம் போட்டு பேசிட்டு இருக்கீங்க சண்டை போடுறீங்களா என பாக்யா கேட்க இவங்க வீட்ல இவர் பணம் கேட்டு இருக்கா. எனக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா? எதுக்கு கேள்வி பணம் கேட்ட என பாக்கியா கேட்க அங்கிள் கேட்டதும் இவன் இதனை சொல்லிட்டான் நீங்களும் என்கிட்ட இருந்திருந்தால் நான் கொடுத்திருப்பேனே வருத்தப்பட்டீங்க அதனால தான் எனக்கு பணம் கொடுக்கணும்னு தோணுச்சு. அதுக்கு தான் அப்பா கிட்ட கேட்டேன் என கூறுகிறார்.

பிறகு எங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வருவதற்கு காரணம் நீ மட்டும் தான் மா. நீ இல்லன்னா எங்களுக்குள்ள பிரச்சினையே வராது என கூறுகிறார். நீ ஒருத்தி தனது வீட்டில் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என செழியன் சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகிறார். அதன் பிறகு எழில் வந்துவிட என்னடா பிரச்சனை எதுக்கு அம்மாகிட்ட சத்தம் போட்டுட்டு இருக்கேன் என கேட்க இதுல நீ தலையிடாதே நான் செம காண்டுல இருக்கேன் என கூறுகிறார். காண்டா இருந்தா செவுத்துல போய் இடிச்சுக்கோ என எழில் கூறுகிறார். ஜெனி அம்மா உங்க கிட்ட பணம் கேட்க சொன்னாங்களா எனக் கேட்க இதுக்கும் ஆண்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறுகிறார்.

திரும்பவும் செழியன் எல்லா பிரச்சினைக்கும் நீதான் காரணம் என பாக்கியாவை கைகாட்ட கோபமான எழில் அடிக்க பாய்கிறார். இருவருக்குமிடையே சண்டை நடக்கிறது. இது கொஞ்சம் தான் காரணம் என செழியன் மீண்டும் பாக்கியாவை கூறுகிறார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த கோபி சத்தம் போட்டு அனைவரையும் ரூமுக்கு போக சொல்கிறார். பிறகு வீட்டுக்கு வரவே புடிக்கல விட இது என கூறிவிட்டு அவர் மேலே சென்று விடுகிறார். நீ எதுக்குடா உன்னை அடிக்க போன என எழிலை திட்டி விட்டு அழுது கொண்டே கிச்சனுக்குச் சென்று விடுகிறார் பாக்கியா.

இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி இந்த வீட்டில் எவ்வளவு பிரச்சனை, எல்லாத்துக்கும் மேல பணப்பிரச்சனை அதிகமாக இருக்கு என்னால இதை எல்லாம் பார்க்க முடியல. கோபி வீட்டுக்கு வரவே புடிக்கலைன்னு சொல்றான், அவன் உங்களை பார்க்க கூட வரது இல்ல. நாம இங்கே இவங்களுக்கு தொந்தரவா இருக்க வேண்டாம் ஊருக்குப் போயிடலாம் நான் உங்கள பார்த்துக்கிறேன். அப்படியாவது இவங்க நிம்மதியா இருக்கட்டும் என கூறுகிறார். ஆனால் கோபியின் அப்பா வேண்டவே வேண்டாம் என தலையை ஆட்டுகிறார். நீ போய் பேசு என கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி எனக்கு இது எல்லாம் பார்க்கிற சக்தி இல்ல நான் என்ன பேசுறது என அழுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 10.03.22
Baakiyalakshmi Serial Episode Update 10.03.22