Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செழியனால் வீட்டில் வெடித்த பிரச்சனை.. கோபிக்கு வைத்த செக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 08.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டுக்கு வந்த பாக்கியா கோர்ட்டில் கும்பல் கும்பலாக வந்து விவாகரத்து கேட்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க ஈஸ்வரி அதைப்பற்றி எல்லாம் பேசாத வீட்டில் அதைப் பற்றி யோசிக்காத எனக் கூறினார். பிறகு அவர் ரூமுக்குள் எழுந்து சென்று விடுகிறார்.

அதன் பின்னர் கோபி சோபாவில் அமர்ந்து கொண்டு இருக்க அப்போது வந்த இனியா என் அப்பா அம்மாவை உங்க ஆபீஸ்ல சேர்த்து விட்டீர்களா என கேட்க கோபி ஆமாம் என சொல்கிறார். ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு சார் நீங்க இதுல அம்மாவை சேர்த்துக்கிட்டா இன்னும் பிரச்சனை அதிகமாக தான் ஆகும் என கூறுகிறார். இதனால் ஈஸ்வரி உங்க அம்மாவை மட்டம் தட்டுறதையே வேலையா வச்சுட்டு இருக்காத எனத் திட்டுகிறார். தாத்தாவுக்கு உடம்பு நல்லா இருக்கா வரைக்கும் பாட்டியின் அதைத்தான் பண்ணாங்க இப்ப அப்படியே அம்மா பக்கம் சாய்ந்துட்டாங்க என இனியா கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி என்னப்பா விஷயம் எனக் கேட்க கோபி ஒரு கதையை எடுத்து விடுகிறார். அதன் பிறகு அப்பாவைப் பற்றி நலம் விசாரிக்கிறார் கோபி. பிசியோதெரபி பண்றதால அவரே எழுந்து நிற்கிறது என ஈஸ்வரி சொல்கிறார். ‌ அப்படியே நடந்து விட்டால் போதும் என சொல்ல கோபி அதெல்லாம் சீக்கிரம் நடந்துவிடுவார் கவலைப்படாதீங்க அம்மா என சொல்கிறார். பிறகு இதுதான் உங்க அப்பா வந்து பார்க்கவே மாற்ற என சொல்ல அப்பாவை பார்த்தாலே தாத்தாதான் கோபமாக ராதே என் இனிய சொல்லு ஈஸ்வரி அதான் எங்களுக்கும் புரியல என்ன பிரச்சனை என கேட்கிறார். உங்களுக்கே தெரியல எனக்கு மட்டும் எப்படிமா தெரியும் என கோபி சொல்ல சரி என ஈஸ்வரி உள்ளே சென்று விடுகிறார்.

அதன்பிறகு பாக்கியா வந்து இருவரையும் சாப்பிட கூப்பிட வேண்டாம் கொஞ்ச நேரம் போகட்டும் என்று சொல்லிவிடுகின்றனர். இது நேரத்தில் கோபிக்கு அவருடைய நண்பர் போன் செய்து கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்கிறார். கொஞ்சம் டைட்டா இருக்கு இரண்டு வாரத்தில் கொடுத்துவிடுகிறேன் எனக்கும் சொல்கிறார். செழியனிடம் 1-ல் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம் கிடைக்குமா என கேட்கிறார். அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை என் பிரெண்ட் கேட்டான் கொடுத்துட்டேன் அவ இன்னும் திருப்பித் தரல என பொய் சொல்லி விடுகிறார் செழியன். நான் வேற எங்கேயாவது அரேஞ்ச் பண்ணி கொடுக்கலாம் என கேட்க வேண்டாம் நான் பார்த்துகிறேன் நீ கஷ்டப் படாத என சொல்லுகிறார். இதையெல்லாம் ஜெனி மேலே இருந்து பார்த்து விடுகிறார்.

இந்த பக்கம் ஈஸ்வரியும் அவருடைய கணவரும் எழில் பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் உள்ளே வருகிறார். ஜெய் தோசை மட்டும் எடுத்து வர அவருக்கு சட்னி எடுத்து வருகிறார் பாக்கியா. பிறகு இரவில் தூங்காமல் உடம்பு என்னத்துக்கு ஆகிறது என கேட்க இரண்டு வாரம்தான் அதுக்கப்புறம் வேலை முடிஞ்சுடும் படம் ரிலீஸ் ஆனா நல்லா தூங்குவேன் என கூறுகிறார். பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு தாத்தா பாட்டிக்கு குட்நைட் சொல்லிவிட்டு வேலை இருக்கிறது என வெளியில் கிளம்பி விடுகிறார் எழில். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜெனி அப்பாவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு வாங்க இதனால் கோபமான செழியன் எல்லாத்துக்கும் நீதான் காரணம் என பாக்கியாவை திட்டி சண்டை போடுகிறார். எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம் என்று சொல்கிறேன் என எழில் சண்டைக்கு செல்கிறார்‌. இருவருக்கும் இடையே கைகலப்பு நடக்கின்றது.

Baakiyalakshmi Serial Episode Update 08.03.22
Baakiyalakshmi Serial Episode Update 08.03.22