Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் பிரேக்கப்.. கவின் ஓபன் டாக்

BB Kavin About Breakup With Losliya

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சீரியல் நடிகராகவும் வலம் வந்து வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மூலம் கவினுக்கு காண ரசிகர்கள் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது. மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்து வந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவர்களின் காதல் என்னாச்சு என தெரியவில்லை. ஒரு இடத்தில் கூட இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை இதனால் இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர் என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் கவின் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தற்போது நான் சிங்கிள் தான் என கூறியுள்ளார். ஒரு ஆளுக்காக நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும் என்ன நடந்தாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல வேண்டும். அப்படியொரு காதலுக்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதன் மூலம் கவின் லாஸ்லியா உடனான பிரேக்கப்பை உறுதி செய்துள்ளார்.

BB Kavin About Breakup With Losliya
BB Kavin About Breakup With Losliya