தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதன் இடத்தை அவருக்கு பதிலாக கடந்த வாரம் இதழ் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கமல்ஹாசன் நிகழ்ச்சியில் வெளியேறியதும் வனிதாவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டார். உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாக இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறினார்.
மேலும் கமல்ஹாசன் சூட்டின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி ஏதோ தப்பாக செல்வது போல அவருக்குத் தோன்றியிருக்கிறது. நான்கு நாள் மட்டுமே தான் அவருக்கு சூட்டியுள்ளது அப்படியிருக்கையில் அந்த நான்கு நாள் கால்ஷீட்டை அவரால் ஒதுக்க முடியாதா? இதில் அவர் நடிக்கும் படம் அவருடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் படம். அப்படி இருக்கையில் கால்ஷீட் ஒதுக்குவது என்பதில் சிக்கல் இருக்காது.
நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை என்பதால் தான் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எனக்கு ஏதோ தப்பாகச் செல்வது போன்றே தோன்றியது. அதனால்தான் நானும் மன அழுத்தத்தில் இருந்தேன். உடல் நிலை கருதி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.


