Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போகும் ஹீரோ ஹீரோயின் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் தகவல்

Maanadu Remake in Telungu

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

தமிழில் கிடைத்த வெற்றி காரணமாக இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் மற்றும் ரீமேக் உரிமையை நடிகர் ராணாவின் தந்தையின் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஆனால் படத்தை டப் செய்வதற்கு ரீமேக் செய்வதற்கு தான் இந்த நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

தமிழில் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவே இந்தப் படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ‌ மேலும் சிம்புவின் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maanadu Remake in Telungu
Maanadu Remake in Telungu