தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டுக்கு வந்த சரவணன் இறக்கும்போது சந்தியாவின் அப்பா கொடுத்த பேனாவை தேடுகிறார். ரூம் எல்லாம் அலசி ஒரு வழியாக அந்த பேனாவை எடுக்கிறார்.
அதன்பிறகு இந்த பேனாவைக் கொடுத்து சந்தியாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் என முடிவு செய்கிறார். பிறகு சிவகாமியின் அவருடைய கணவரும் அமர்ந்து இருந்தபோது சந்தியா வீட்டிற்கு வருகிறார். வந்த கையோடு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். பிறகு இரண்டு நாள் இருந்துட்டு வர வேண்டியதுதானே என சிவகாமி சொல்ல இல்ல அத்தை இங்கதான் இருக்காங்க தோன்றும்போது போய்ப் பார்த்துக்கறேன் என சொல்கிறார். பிறகு சந்தியா ரூமுக்கு சென்று விடுகிறார்.
சந்தியாவின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்த அர்ச்சனா இவளோட அண்ணனுக்கு குழந்தை பிறந்து இருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் ஆடுற இவளுக்கு குழந்தை பிறந்த இன்னும் எண்ணமெல்லாம் ஆடுவாளோ என சொல்கிறார்.
இந்த பக்கம் பாஸ்கர் பார்வதி ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு விக்கி தன்னுடைய நண்பர் வினோத்துடன் வருகிறார். பார்வதி கூட பேசிட்டு இருக்கீங்களா எப்ப கல்யாணம் என கேட்க இன்னும் ஒரு வாரத்தில் பரிட்சை முடியுது. அதன்பிறகு கல்யாணம் தான் என சொல்கிறார். பிறகு பாஸ்கர் அங்கிருந்து கிளம்பி விட இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது கையில் இருவரும் சேர்ந்து இருந்த போட்டோக்கள் ஆதாரம் இல்லை அது எல்லாம் சந்தியா அழித்து விட்டார் என புலம்புகிறார் விக்கி.
ரூமுக்குள் அர்ச்சனா சந்தியா பற்றிப் பேசி புலம்பிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் செந்தில் உள்ளே வருகிறார். இங்க பாருங்க இந்த வாரம் சந்தியாவோட அண்ணன் பொண்ணுக்கு பெயர் வைக்கிற பங்ஷன் நடக்குதாம். அத்தை பணம் ஏதாச்சு கேட்டா எடுத்து நீட்டாதீர்கள் யாரோ பெத்த குழந்தைக்கு நாம் எதுக்கு செய்யணும். பணத்தை சேர்த்து வையுங்கள் நாளைக்கு ரொம்ப பிறக்கப் போற குழந்தைக்கு தேவைப்படும் என சொல்கிறார். உடனே செந்தில் நீ எல்லாம் நல்ல விதமாகவே யோசிக்க மாட்டியா சந்தியா நீ ஓட அண்ணன் எனக்கும் சொந்தக்காரர் எடுத்தால் அவர்களுக்கு சீர் செய்து தான் ஆகணும். பிறக்கப் போகும் குழந்தைக்கு நிறைய பாவத்தை நீ சேர்த்துட்ட நான் சொத்து சேர்க்கிறேனோ இல்லையோ சொந்தத்தை சேர்த்து வைக்கனும் என சொல்கிறார்.
பிறகு விக்கி பார்வதியின் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என யோசிக்க அப்போது அவருடைய நண்பர் போட்டோ காப்பி எல்லாமே அர்ச்சனாவிடம் இருப்பதை ஞாபகப்படுத்துகிறார். பிறகு விட்டு சூப்பர் ஐடியா இதை வைத்து பார்வதியின் கல்யாணத்துக்கு பாடை கட்டணும் என சொல்கிறார்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த சரவணன் சந்தியா வந்து இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். பத்து நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னிங்க அதுக்குள்ள வந்துட்டீங்க என கேட்கிறார். வீட்ல இருக்கவங்க எல்லாம் விட்டுட்டு என்னால இருக்க முடியாது என சந்தியா சொல்ல எல்லாரையுமா இல்லை யாரையாச்சுமா என கேட்கிறார்.
அதன்பிறகு சரவணன் சந்தியா படுத்து தூங்குவதும் அந்த பேனாவை எடுத்து கிப்ட் செய்கிறார். மறுநாள் காலையில் சிவகாமியும் அவருடைய கணவரும் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது சந்தியாவின் அண்ணன் வீட்டிற்கு வருகிறார். அவரை வரவேற்று உட்கார வைத்த இவர்கள் சந்தியா குழந்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்ததை கூறி சந்தோஷம் படிக்கின்றனர். சந்தியா இப்ப எப்படி அத்தை உங்களுக்கு ஏத்த மாதிரி மகளாய் இருக்காளா என கேட்க சிவகாமி இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச மருமகள் சந்தியா தான். என்ன தான் நிறைய படித்து இருந்தாலும் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் அன்பாகவும் அனுசரித்தும் செல்கிறார் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 23.02.22

