Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செலவிற்கு கோபியிடும் பணம் கேட்ட பாக்கியா.. வீட்டை விட்டு வெளியே போக யோசிக்கும் செழியன்… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 22.02.21

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பணத் தேவைக்காக இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார் பாக்கியா. இரவில் நடு பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது தட்டு கீழே விழுந்து எழில் தூக்கத்திலிருந்து எழுந்து கொண்டு தன் அம்மாவுக்கு வந்து உதவி செய்கிறார். உனக்கு பணம் தேவைப்படுது அதனாலதான் நீ இப்படி நேரம் காலம் இல்லாம வேலை செய்யுற என எழில் கூறுகிறார். எழில் தனக்கு உதவி செய்வதை நினைத்து கண் கலங்குகிறார் பாக்கியா.

மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் இருக்க அப்போது ஜெனியும் அங்கு வருகிறார். இந்த நேரத்தில் வந்த கோபி பாக்கியாவிடம் பணம் கொடுத்துவிட்டு இந்த மாதம் மட்டும் இரண்டரை லட்சம் செலவு செய்து இருக்கேன். என்னாலயும் செலவை சமாளிக்க முடியலையா கொஞ்சம் பார்த்து செலவு பண்ணு என சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட செல்வி ஜெனியிடம் சார் பாத்தியா எப்படி சொல்லிட்டுப் போறாரு அக்கா மட்டும் எவ்வளவு வேலை பண்ணும். பகல் நைட் உன்ன பாக்காம வேலை செய்யுது. நேற்று அக்கா தூங்க 2 மணி ஆச்சு என செல்வி சொல்கிறார். அதன் பின்னர் ஜெனி மேலே சென்று செழியன் இடம் குடும்ப செலவுக்காக பணம் கொடுக்கலாம் இல்ல என சொல்ல அவர் கடுப்பாகி சத்தம் போட தொடங்குகிறார். அட்லீஸ்ட் நம்ப சாப்பிடறதுக்காவது பணம் கொடுக்கலாம் என என சொல்லிக் கொண்டிருக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் பாக்கியா உள்ளே வருகிறார். பிறகு செல்லியின் இடம் வீட்டோட செலவு அதிகமாகிக் கொண்டே போகிறது சமாளிக்க முடியல. அப்பாவுக்கும் பிசினஸ்ல நிறைய பிரச்சனை அதெல்லாம் உனக்கே தெரியும் அதனால மாசம் மாசம் கொஞ்சம் பணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் பாக்கியா கேட்க அன்னைக்கு தான் என்கிட்ட பணம் வாங்குற அளவுக்கு இன்னும் எங்க நிலைமை வரலன்னு டயலாக் எல்லாம் பேசனீங்க என செழியன் கேட்கிறார்.

பேசினேன் தான் இல்லன்னு சொல்லல இப்ப ஏன் யார்கிட்டயும் பணம் வாங்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன் ஆனால் நிலைமை சரியில்லை என கூறுகிறார். எழில் அவன் கிடைக்கிற பணத்தை மொத்தமாக என்கிட்ட தான் கொடுத்துவிடுகிறான் என சொல்ல அப்போ நான் பணம் தரலாம்னு குத்தி காட்டுறீங்களா என சொல்லி என் கேட்கிறார். நான் யாரையும் குத்திக் காட்ட இல்லை நீ பணம் கொடுனு தான் கேட்கிறேன் அவ்வளவுதான் என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து விடுகிறார்.

அதன்பிறகு செழியன் பர்சில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து ஜெனி இடம் கொடுத்து இந்தா இத உங்க ஆன்ட்டீ கிட்ட கொடுத்திடு என்னால இவ்வளவு தான் கொடுக்க முடியும் என சொல்கிறார். இந்த பணத்தை எடுத்து வந்து பாக்கியம் இடம் கொடுத்த ஜெனி செழியன் ஏன்தான் இப்படி இருக்கான்னு தெரியல. அவன் அங்கிளோட சுமையை ஷேர் பண்ணி இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் ஆவது இதை பண்ணி இருக்கணும். ஆனாலும் இப்போ வரைக்கும் இந்த வீட்டுக்காக எதுவும் பண்ணல. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவை இன்னும் பணம் கொடுத்து இருக்கலாம் ஆனால் பத்தாயிரம் ரூபாய்தான் கொடுக்கிறான். செடியில் ஏன்டா இப்படி அன்பு பாசம் என்று எதுவுமே இல்லாம இருக்கானு தெரியல என ஜெனி சொல்கிறார். மேலும் நான் வேலைக்கு போனதும் கண்டிப்பா உங்களோட சுமையை ஷேர் பண்ணிப்பேன் என சொல்கிறார்.

அதற்கு பாக்கியா இப்பவே நீ இருக்கிற தைரியத்துல தான் என்னால ஓட முடியுது. இல்லனா என்னால இவ்வளவு வேலை பண்ண முடியாது என சொல்கிறார். நீ என் மகளை விட என் கூட அதிகமாய் இருக்க என கண் கலங்குகிறார். பிறகு ஜெனி மேலே சென்று விடுகிறார். ‌

ரூமுக்குள் ஈஸ்வரியும் அவருடைய கணவரும் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கையில் சாப்பாடு பாக்கியா உள்ளே வருகிறார். நாம கொஞ்சம் கொஞ்சம் பேசுவது என ஈஸ்வரியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 22.02.21
Baakiyalakshmi Serial Episode Update 22.02.21