Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவின் நடவடிக்கையில் ஜெனிக்கு ஏற்படும் சந்தேகம்.. ராதிகாவிடம் எமோஷனலாக பேசிய கோபி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 16.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டுக்கு போன கோபிக்கு அவர்கள் புதிய போன் வாங்கி இருப்பதை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். எனக்கு இதுவரைக்கும் யாரும் இப்படி கிப்ட் வாங்கி கொடுத்தது இல்லை என கோபி கண்கலங்க கண்ணை துடைத்து விடுகிறார் மயூ. பிறகு இந்த போன் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டும் நான் அப்புறம் யூஸ் பண்றேன் என சொல்கிறார். உங்களுக்குத் தான் யூஸ் பண்ணுங்க என ராதிகா சொல்ல நீங்க வாங்கி கொடுத்தது கொஞ்ச நாளைக்கு புதுசாகவே இருக்கட்டும் என சொல்கிறார்.

இந்த பக்கம் தாத்தாவுடன் ஈஸ்வரி மற்றும் ஜெனி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது இனியா அங்கு வருகிறார். பிசியோதெரபிஸ்ட் வரும் நேரம் என்பதால் முழு மேக்கப் போட்டுக் கொண்டிருப்பது டிரஸ் அணிந்து வந்து நிற்கிறார். என்ன புது டிரஸ் போட்டிருக்க பிரெண்ட் வீட்டுக்கு போறியா என்ன ஈஸ்வரி கேட்க இல்ல பாட்டி இது இரண்டு மூன்று முறை தான் போட்டேன் பழைய டிரெஸ்ல சொல்கிறார்‌. ‌ பிசியோதெரபிஸ்ட் ரஜினிகாந்த் வந்ததையடுத்து தலை முடியை சரி செய்து கொண்டு தன்னை அழகு படுத்திக் கொள்கிறார் இனியா. இதையெல்லாம் ஜெனி நோட் செய்கிறார்.

பிசியோதெரபிஸ்ட் வந்ததும் விடாமல் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இனியா. இதனால் ஜெனி வா நாம வெளியே இருக்கலாம் என சொல்ல பிசியோதெரபிஸ்ட் இனியா பிசியோதெரபி கத்துக்கிட்டு தாத்தாவுக்கு பண்றதா சொன்னா கற்று கொள்ளட்டும் என கூறுகிறார்.

பிறகு பாக்கியா ஆபீஸில் இரண்டு ஆர்டர்களை எடுத்து விட்டு வீட்டிற்கு வந்து அவருடைய மாமாவுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். பிறகு அவர் யூரின் போக வேண்டும் என சொல்ல பாக்கியா அதற்கு உதவி செய்கிறார். இதைப் பார்த்துவிட்டு ஈஸ்வரியும் அவரது கணவரும் கண்கலங்க பாக்கியா நான் எங்க அப்பா இருந்தா இப்படி பண்ண மாட்டானா. என்ன உங்க பொண்ணு மாதிரி தானே பார்த்து இருக்கீங்க எனக்கு எவ்வளவு விஷயத்துல ஆதரவா இருந்து இருக்கீங்க நான் செய்யறது எல்லாம் ரொம்ப சின்னது என கூறுகிறார்.

தயவுசெய்து இப்படி எல்லாம் நினைச்சு கண் கலங்காதீங்க என பாக்கியாவும் கண்கலங்கி அழுகிறார். பாக்யாவின் மாமா கடவுளே சீக்கிரம் என்று குணப்படுத்திடு, இல்லன்னா என்ன மொத்தமா கூட்டிக்கொண்டு போ.. இப்படி எனக்காக எல்லோரும் கஷ்டப்படுவதை பார்க்க முடியல என வேண்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 16.02.22
Baakiyalakshmi Serial Episode Update 16.02.22