Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கெத்தான லுக்கில்.. சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் அப்டேட்

Actor Simbu Latest Getup in VTK

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வரும் இவர் தற்போது வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் கெட்டப்பில் சிம்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த மாஸ் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.