தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முழுமையாக முடிவடைந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி கண்ட விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு
சமீபத்தில் தளபதி விஜய்யை புதுச்சேரி முதல்வர் நேரில் சந்தித்து வந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்து நின்று போட்டியிடுகிறது என அறிவித்துள்ளனர். நம் இயக்க வேட்பாளர்கள் வெற்றிபெற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
