தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகராகவே இருந்து வந்தார்.
இவர் மீது பல தயாரிப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். இதையெல்லாம் ஓரம்கட்டி தற்போது உடல் எடையை மட்டும் குறைத்து ஸ்லிம்மாக மாறி படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
நேற்று என்னுடைய பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிறிது குண்டாகி போன நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியானது எப்படி என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
https://t.co/PFtH6wzAXg#Atman #SilambarasanTR ???????? pic.twitter.com/R1RrO6eYQX
— Silambarasan TR (@SilambarasanTR_) February 4, 2022