வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். முன்பு சிம்பு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி தற்போது அவர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த பதிவு ‘பத்து தல’ படத்தின் அப்டேட்டாக இருக்குமா அல்லது வேறு எதேனும் சிம்புவின் புதுப்பட அறிவிப்பா என அவருடைய ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
பத்து தல படத்தில் சிம்புவுடன், கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
— Studio Green (@StudioGreen2) January 27, 2022