தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்யை பற்றி அவ்வப்போது செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்படும்.
அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், நடிகர் விஜய் திருப்போரூரில் பள்ளி ஒன்றை கட்டி வருவதாகவும், அந்த பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. அந்த பள்ளிக்கூடத்தை நடிகர் விஜய்யின் உறவினர் பிரிட்டோ தான் கட்டி வருகிறாராம்.
இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.