நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தொடர்ந்து உடனடியாக தொடங்கிய படம் வலிமை. இப்பட பூஜையின் போதே பட பெயரை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் ரசிகர்கள்.
உடனுக்குடன் படப்பிடிப்புகள் எல்லாம் வேகமாக நடந்து வந்தது, ஆனால் கொரோனா அவர்களின் வேகத்திற்கு பெரிய பிரேக் கொடுத்துவிட்டது.
பின் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது. தயாரிப்பு குழுவும் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் பிஸியாக உள்ளார்கள்.
இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக், ஃபஸ்ட் சிங்கிள் என வெளியாகியுள்ளது. அடுத்து என்ன ரிலீஸ் தான், ஆனால் படக்குழு இதுவரை சரியான ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் ஒரு தகவல், மதுரையில் உள்ள சில திரையரங்குகளில் படத்தை தாங்கள் இந்த பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என உறுதி செய்துள்ளனர்.
மதுரை திருமங்கலம் சந்தைப்பேட்டை ரிட்ஜி பாணு தியேட்டர் தல அஜித்தின் ‘வலிமை’ படத்தை திரையிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மதுரை அரசரடி SDC சோலமலை தியேட்டரும், அனுப்பானடி பழனி ஆறுமுகா, ராமநாதபுரம் நகரில் D சினிமாஸ், ஜெகன் திரையரங்கமும் படத்தை திரையிடுவதாக அறிவித்துள்ளார்கள்.