தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை வைத்து ‘லிகர்’ என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் வில்லனாக மைக் டைசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சார்மி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாயுடன் செல்லமாக கொஞ்சி விளையாடுகிறார் சார்மி. அந்த நாய் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து நாயா… அல்லது சிங்கமா என்று கமண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram