அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படி அஜித் தரப்பில் அறிவிப்பு வந்தது.
இந்த நிலையில் சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அநியாயம் பண்றானுங்க நம்ம பசங்க???????????????? வலிமை அப்டேட்#ValimaiUpdate #AjithKumar pic.twitter.com/ca7Xw5mJTd
— குமரி மாவட்ட தல ரசிகர்கள் (@Kumarimavatam71) July 4, 2021

