மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.
இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த இயக்குனர் மிஷ்கின், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி ‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

