விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.
இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.
மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ”டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்” என்று முடிவெடுத்தார் ரஜினி.
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினி அவர்களுக்கு அண்ணாத்த படக்குழுவினரின் சார்பாக வாழ்த்துக் கூறி ரசிகர்களின் ஆதரவோடு டிசம்பர் 15ஆம் தேதி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
#Annaatthe shooting resumes from Dec 15th!@rajinikanth @directorsiva #HBDSuperstarAnnaatthe#HBDSuperstarRajinikanth pic.twitter.com/GhfP9FV71W
— Sun Pictures (@sunpictures) December 12, 2020

