தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. அவரின் நகைச்சுவை காட்சிகள் தான் பலரின் மனக்கவலையை தீர்க்கும் மருத்து எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.
23 ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கத்தின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிப்பில் அவருக்கு பிரச்சனைகளும், தடைகளும் இருந்துவந்தன.
இந்நிலையில் அவர் வெப் சீரிஸில் நடிக்கப்போவதாக கூறியிருந்தார். தற்போது கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவுள்ளார்.
வடிவேலுவின் சினிமா பயணத்தில் பல ஹிட்டான காமெடி கதாபாத்திரங்களை தந்த சுராஜ் தான் இந்த வெப் சீரிஸை இயக்கப்போகிறாராம்.
காமெடி கலந்த பேய்க்கதையில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளாக உருவாகிறதாம். இதுகுறித்து அமேசான், ஹாட் ஸ்டார் நிறுவனங்களில் வடிவேலு பேசிவருகிறாராம்.