வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிறது.
அபப்டி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
ஆம் ” அவர்கள், கோலங்கள், தென்றல், ஆஃபீஸ் ” உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியவர் சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ்.
இந்நிலையில் இவருக்கு தற்போது 40 வயது ஆகிறதாம். ஆனால் இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லையாம்.
தற்போது இவர் அழகு எனும் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.