விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது தற்போது விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக சிலரும் அவருக்கு எதிராக சிலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் விருது விழா ஒன்றில் மலையாள நடிகை ஆன சுவாசிக்காவிடம் தமிழ் நடிகர்களில் இருந்து மலையாளத்திற்கு ஒத்தரை தூக்கிட்டு போயிடனும்னா யாரை தூக்கிட்டு போவீங்க என்று கேட்க உடனே சிறிதும் யோசிக்காமல் சுவாசிக்கா தளபதி விஜய் சார் என்று சொல்ல அரங்கமே கைத்தட்டி உள்ளது.
நீங்க மலையாளம் சினிமாவுக்கு வந்துருங்க விஜய் சார் நாங்க உங்களைக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் கூட நடிக்க முடியுமான்னு தெரியாது ஆனா நீங்க இப்படி ஒரு கேள்வியை கேட்கும் போது எனக்கு அவருடைய முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது என்று சொல்லுகிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


