Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வருத்தத்தில் ஆனந்தி, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

moondru mudichu singappenne serial promo update 27-01-26

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் சிங்கப் பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் அன்பு ஆனந்திக்காக மருந்து வாங்கிக் கொண்டு போக நந்தினியின் சூர்யாவும் சிலையை செய்து முடிக்கின்றனர். இதை பத்திரமாக உள்ளே வைக்கனும் என்று சொல்ல சூர்யா பொறுமையாக எடுத்துச் சென்று வைக்கிறார். இருவரும் அங்கிருந்து கிளம்ப மாதவி அங்கு வர மறுபக்கம் அன்புவைப் பாலோ பண்ணிக் கொண்டு ஆட்கள் வருகின்றனர். அவர்கள் அன்புவை கொல்ல வர, அவர்களிடம் அன்பு சண்டை போட அதில் ஒருவன் சுந்தரவல்லி அம்மா சொன்ன மாதிரி கையை உடைடா என்று சொல்ல உடனே அன்பு முதல்ல மருந்து ஆனந்தி கிட்ட கொடுக்கணும் என்று சொல்லி அவர்களிடம் தப்பித்து ஓடுகிறார். மாதவி அந்த பொம்மையை உடைத்து சுக்குநூறாக்க அன்பு அந்த வீட்டுக்குள் ஓடி வருகிறார். அந்த ரவுடிகளும் வந்து வந்துவிட இவர்கள் அந்த ரூமுக்குள் சண்டை போட மாதவி அங்கிருந்து சென்று விட, அன்பு வீட்டுக்கு வந்து ஆனந்தியை எழுப்பி மருந்து கொடுக்கிறார். ஆனந்தி என்னாச்சு சட்டை எல்லாம் கரையா இருக்கு என்று கேட்கிறார். ஒன்னும் இல்ல ஸ்லிப் ஆயிடுச்சி என்று சொல்ல, ஆனந்தி நீங்க பொய் சொல்றீங்க என்று சொன்ன அன்பு நடந்த உண்மையை ஆனந்தியிடம் சொல்ல நான் இதை உடனே மகேஷ் சார் கிட்ட சொல்லப் போறேன் என்று சொல்லுகிறார்.

இப்போதைக்கு நீங்க சொல்ல வேண்டாம், இதனால மகேஷ் சார் குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று சொல்ல அன்புவும் சரியன சொல்லி அமைதியாகி விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினியும் சூர்யாவும் சிலையை பார்க்கலாம் என்று ஆவலோடு பார்க்க வர ஊர் பெரியவர்கள் ஓடி வந்து பரபரப்பாக சிலை சுக்கு நூறாக உடைந்திருப்பதாக சொல்லுகின்றனர். உடனே சூர்யா நாங்க கரெக்டா தானா செஞ்சு வச்சுட்டு வந்தோம் அது எப்படி உடைந்திருக்கும் என்று சொல்ல நந்தினி கண்கலங்கி அழுகிறார். இதை யார் செஞ்சி இருப்பாங்க என்று அருணாச்சலம் கேட்க, நந்தினி பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சு இதை நான் சும்மா விடமாட்டேன் என்று கோபப்பட உடனே பார்வதி அதுக்கு தான் சிலை செய்ய வேண்டாம்னு சொன்ன என்று சொல்ல உடனே சூர்யா கோபப்பட்டு உங்க அம்மாவ அமைதியா இருக்க சொல்லு மகேஷ் என்று சொல்லுகிறார். சூர்யா ஒவ்வொரு விஷயத்திலும் நம்மள அசிங்கப்படுத்துறது ஒரு வேலையை வெச்சிருக்காங்க என்று சொல்லி கோபப்பட, மகேஷ் பார்த்து பேசு சூர்யா கண்ட்ரோலா இரு என்று கேட்க உடைந்த சிலையை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா என்று சூர்யா கேட்கிறார்.

உடனே சுந்தரவல்லி சிலையை உடைச்சதே அவங்கதான் என்று சொல்லுகிறார். உடனே நாங்க தப்பு பண்ணிட்டோம் உங்க வீட்டு வேலைக்காரன் மருமகளை செய்ய வச்சது எங்க தப்புதான் என்று சொல்ல சூர்யா உடனே கோபத்தில் பேச வர மகேஷ் இவங்க எங்க குடும்பம் தான் ஒடச்சாங்கறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்கிட்ட கேட்க சுந்தரவல்லி ஆதாரம் தானே நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி அன்புவின் டி-ஷர்டை எடுத்துக் கொண்டு வந்து காட்டுகிறார். இது யாரோடது என்று சுந்தரவல்லி கேட்க என்னோடது என்று அன்பு சொல்லுகிறார். மகேஷ் என்ன அன்பு இது என்று கேட்க எனக்கு ஒன்னும் தெரியல சார் என்று சொல்லுகிறார். உடனே ஆனந்தி சட்டையில வச்சிருக்கிற கரையை மட்டும் பார்த்து எப்படி அவருதான் உடைச்சாருன்னு சொல்ல முடியும் என்று கேட்க, நேத்து நைட்டு அன்பு இந்த டி-ஷர்ட் தான் இருந்தான் நந்தினியும் மண்ணுலதான செஞ்சு பெயிண்ட் அடிச்சிருப்பா இவன்தான் ஒடச்சிருப்பான் என்று உறுதியாக சுந்தரவல்லி சொல்ல சூர்யாவோ கோபப்பட மகேஷ் கொஞ்ச நேரம் அமைதியாய் இரு சூர்யா எதுவாக இருந்தாலும் விசாரிக்கலாம் என்று சொல்ல உடனே மகேஷ் அன்புவிடம் இதுக்கும் உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா என்று கேட்க, சுந்தரவல்லி நீ வெளியே போவதே இல்லையா என்று கேட்க போனேன் என்று சொல்ல சில செய்ய இடத்துக்கு போனியா என்று மகேஷ் கேட்டா நான் வேற காரணத்துக்காக போனேன் என்று சொல்ல உடனே சூர்யா அன்புவின் சட்டையை பிடித்து இவன் தான் சிலையை உடைத்து இருக்கான் என்று சொல்ல, உடனே கோபப்பட்ட அன்பு என் கையை உடைக்க உங்க அம்மா தான் நைட் பிளான் பண்ணாங்க அது முடியாமல் இப்ப நீங்க உடைக்கிறீர்களா என்று கேட்க சூர்யா அன்பு வை அடிக்க கை ஓங்க மகேஷ் தடுக்கிறார்.

பிறகு ஆனந்தி எனக்காக மருந்து வாங்க தான் அவர் வெளியே போனாரு என்று சொல்ல அன்பு நடந்த விஷயத்தை சொல்ல சூர்யா நல்ல கதையை சொல்ற என்று சொன்னவுடன் சூர்யாவும் மகேஷும் மாறி மாறி சட்டையைப் பிடித்துக் கொண்டு எதிர் எதிராய் நிற்கின்றனர். உடனே பார்வதி பஞ்சாயத்தை கூட்டச் சொல்ல பஞ்சாயத்தும் கூடுகிறது. சுந்தரவல்லி சம்பந்தமே இல்லாம புது ஆளுங்கள கூட்டிட்டு வரும்போது இது மாதிரி பிரச்சனை வரும்னு தெரியும் என்று சொல்ல அருணாச்சலம் இந்தத் திருவிழா ஆரம்பிச்சதுல இருந்து இது மாதிரி பஞ்சாயத்து கூட்டுறது சரியில்லை என்று சொல்லுகிறார். வழக்கம்போல் மீண்டும் குடும்பத்தினர் அதே கதையை சொல்ல, அவன் செஞ்சது அவ்வளவு சுலபமா மன்னிக்க முடியாது, அவ சாப்பிடாம கஷ்டப்பட்டு அந்த சிலையை செஞ்சிருக்கா தண்டனையை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சூர்யா சொல்லுகிறார். இதுல பாதிக்கப்பட்டது நந்தினி தான் அவ தான் பேசணும் என்று அருணாச்சலம் சொல்ல, எனக்கு அன்பு சிலையை உடைத்து எடுக்க மாட்டாரு என்று தான் தோணுது என்று சொல்லி அவரை மன்னிக்க சொல்லலாம் என்று சொன்ன உடனே ராஜாங்கம் ஒரு பெண்ணிடம் கண்காட்ட அவர் உடனே சாமி வந்தது போல ஆடுகிறார்.

என் வாகனத்தை என் புள்ளச் செய்யணும்னு தீர்மானித்தது நான்தான் என்று சொல்ல, அப்போ ஏன் சிலை உடைந்தது என்று கேட்க தானாகவே உடையல உடைச்சுட்டான் என்று சொல்லி அவளுக்கு எதுக்கு தண்டனையா அவன் ஒவ்வொரு வீடா சென்று மன்னிப்பு கேட்கணும் ஒரு வீட்டுக்கு ஒரு சவுக்கடி அவனுக்கு கொடுக்கணும் என்று சொல்ல, உடனே ஆனந்தி சாமி ஆடும் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, அப்படியும் கேட்காத அந்தப் பெண் கண்டிப்பாக செஞ்சே ஆகணும் என்று சொல்ல ஊர் பொது மக்களும் செய்ய சொல்றோம் என சொல்லி விடுகின்றனர். ஆனந்தியும் நந்தினியும் அன்பு அப்படி பண்ணியிருக்க மாட்டாரு தண்டனை வேண்டாம் என்று சொன்ன ஊர் பொதுமக்கள் அன்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்ல மகேஷ் பேச வரும்போது அன்பு ஆத்தா கொடுத்த தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என முடிவெடுக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ஊருக்கு கட்டுப்பட்டு அன்பு சவுக்கு அடிகளை வாங்கி பிறகு வந்தேன் என்ற உடன் மயங்கி விழ அவரது உடம்பில் விஷம் கலந்துள்ளதாக வைத்தியர் சொல்லுகிறார். கண்டிப்பா மேட்ச்சை டிரா பண்ண பார்ப்பாங்க இதை விடக்கூடாது என்று சூர்யா சொல்ல சுந்தரவல்லி இது எங்க குடும்பத்தோட கௌரவ பிரச்சனை என்று சொல்லுகிறார்.

நந்தினிவிடம் மகேஷ் நீங்க எவ்வளவு ட்ரை பண்ணாலும் கபடி போட்டியில் நிறுத்த முடியாது நாங்க இந்த போட்டியில் ஜெயிச்சு உங்க மூஞ்சில கரிய பூசுவோம் என்று சொல்ல ஆனந்தி என்ன நடந்தாலும் நாங்க இந்த திருவிழாவை நடத்த விட மாட்டோம் என்று முடிவெடுக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu singappenne serial promo update 27-01-26
moondru mudichu singappenne serial promo update 27-01-26