தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது அதாவது ஒரு படம் பார்த்தால் வன்முறை அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியவில்லை என்றும் என் படங்கள் போதைக்கு எதிராக பேசுகின்ற படங்கள் என்றும் இதுவரை 15 ஆயிரம் மாணவர்களிடம் Say No to Drugs என உறுதி எடுக்க வைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் இருந்தாலும் என் மீது என் படங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றால் சமூக மாற்றத்திற்காக அப்படிப்பட்ட படங்களை நான் எடுக்காமல் இருக்கவும் தயாராக இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


