தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்குனரான வெங்கடேஷ் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். பகவதி படத்தில் முதலில் விஜய் முதல்வராக இருப்பது போல கிளைமாக்ஸ் வைத்திருந்ததாகவும் அதன் பிறகு தான் மாற்றியதாகவும் சொல்லி இருக்கிறார்.
பகவதி கதாபாத்திரம் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவது போன்று கதை இருந்ததாகவும் அந்த காலகட்டத்தில் வெளியான பாபா திரைப்படத்தில் ஏழாவது மந்திரத்தை சொல்லி ரஜினி முதல்வராக முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் எடுக்கவில்லை அதனால் தான் இந்த படத்தில் விஜய் முதல்வராக இருந்தால் ஓவர் டோஸ் ஆகிவிடும் என்றுதான் கதையை மாற்றியதாக சொல்லி இருக்கிறார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


