தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும், சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி செய்த சிலை சுக்கு நூறாக உடைந்திருப்பதாக ஊர் பெரியவர்கள் வந்து சொன்னவுடன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே பார்வதி உன்னோட வேலைக்காரன் மருமகளை செய்ய வைத்தது தான் நாங்க பண்ண தப்பு என்று சொல்ல சூர்யா என்ன சொல்றீங்க என்று கோபமாக பார்வதி இடம் பேச போக மகேஷ் சூர்யாவை தள்ளி விடுகிறார்.
உடனே ஆனந்தி சட்டை மட்டும் அவரது வச்சு எப்படி அவர்தான் உடைச்சாருன்னு உங்களால சொல்ல முடியும் என்று கேட்க உன்னோட புத்திசாலித்தனத்தை எல்லாம் உன்னோட வச்சுக்கோ என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே மகேஷ் மற்றும் சூர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு எதிரெதிராக நிற்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


