‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் பட ஷூட்டிங் நிறைவு
இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா..
அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட பலரும் நடித்திருந்திருந்தனர். இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார் சசிகுமார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படத்துக்கு ‘வித் லவ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான ஷுட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், அவ்வப்போது வித் லவ் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் ‘வித் லவ்’ வெளியீடு வரும் பிப்ரவரி 6-ந்தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உலகமெங்கும் வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளது.
மதன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் மலையாள நடிகை அன்ஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இளைஞர்களை கவரும் விதமாக காதல் படைப்பாக ‘வித் லவ்’ உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநராக முதல் படத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்தததை போல், ஹீரோவாகவும் அபிஷன் ஜீவிந்த் வரவேற்பை பெறுவார் என எதிர்பாக்கப்படுகிறது.


