பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ஆனால் சில காரணங்களால் இது கைவிடப்பட்டது.
இந்த நிலையில் ஏன் சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து சுதா கொங்காரா பேசியுள்ளார். அதாவது பராசக்தி படத்தை புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் கொரோனா காலத்தில் அவருக்கு கதை சொன்னேன் ஆனால் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்துவதற்கான தேதிகள் கிடைக்காத காரணத்தினால் சூர்யாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


