Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்​ரன் ஜவஹர்

Mithran Jawahar to direct Shanmuga Pandian

சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்​ரன் ஜவஹர்

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையடுத்து சண்​முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படத்தை இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹர் இயக்​கு​கிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்​திரன்’, ‘திருச்​சிற்​றம்​பலம்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர். தற்​போது மாதவன் நடிக்​கும் ‘அதிர்​ஷ்ட​சாலி’ என்ற படத்தை இயக்கி வரு​கிறார்.

மித்​ரன் ஆர். ஜவஹர், சண்​முக பாண்​டியன் இணை​யும் படத்​தை, ‘கொம்​புசீ​வி’ படத்​தைத் தயாரித்த ஸ்டார் சினி​மாஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. இப்​படத்​தின் ஆரம்​பக்​கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக​வும், நடிகர்​கள் மற்​றும் தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் தேர்​வும் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்​படுகிறது.

Mithran Jawahar to direct Shanmuga Pandian
Mithran Jawahar to direct Shanmuga Pandian