தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!
அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான ‘போர்த்தொழில்’ திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘D54’ திரைப்படமும் மாஸாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷக் மெய்ன்படம் என ஒரே வருடத்தில் 3 மொழிப்படங்களை ரிலீஸ் செய்திருந்தார் தனுஷ். இந்த 3 படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாகும். அவ்வகையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.
இந்நிலையில் ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், தனது 54-வது படத்தில் இணைந்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. நேற்றுடன் D54 திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் ஒரு தரமான படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்ததால், தனுஷ் மகிழ்ச்சியில் உள்ளார். அடுத்தாண்டு கோடைவிடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் ஒரு பீரியட் திரில்லர் படமாகவும், அரசியல் சார்ந்த விஷயங்களும் இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக தனுஷின் கெட்டப் படத்தில் செம ஸ்டைலாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


