போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது 47-வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இதை மலையாள பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்குகிறார். இவர், ‘ஆவேஷம்’ என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.
சூர்யா-47 படத்தில் நஸ்ரியா, ‘பிரேமலு’ நஸ்லென் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் படமான இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. பெரும் கூட்டத்துக்கு இடையே போலீஸ் உடையில் அவர் நிற்பது போன்ற அப்புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சூழலில் சூர்யா-47 படத்தின் ப்ரோமோவை புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இடைவேளையில் ஒளிபரப்ப படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பட இண்டெர்வெலின் போது சூர்யா- 47 ப்ரோமோ ஒளிப்பரப்பப்பட்டால், அது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


