பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஜனவரி 3ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் இது சிவகார்த்திகேயனின் 25 வது படம் என்பதால் அவரது முந்தைய அனைத்து படங்களின் இயக்குனர்களுக்கும் அழைப்பு விடுக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


