தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் நந்தினியிடம் கிச்சனில் பால் பாக்கெட்டை கேட்க உங்களுக்கு எதுக்கு என்று கேட்கிறார் அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று சொல்லிவிட்டு அசோகன் செல்ல மறுப்பக்கம் மாதவி அந்த பாலாக குடிச்சிட்டு ஐயோ அம்மானு கத்துவா என்று புதிய திட்டத்தை போட்டுள்ளார்.
மறுபக்கம் நந்தினி படுத்துக்கொண்டிருக்கும்போது நந்தினியின் மேல் சூர்யாவின் சட்டை இருப்பதை சூர்யா கவனித்து விடுகிறார் இந்த சட்டை எப்படி இங்கு வந்துச்சு நான் இதை ஆங்கரில் தானே மாட்டி வைத்திருந்தேன் என்று யோசித்து விட்டு நந்தினி இடம் கேட்கிறார். நந்தினியும் எப்படி சமாளிப்பது என திரு திரு என்று முழிக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


