Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் & ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள்

Fans are excited about the re-release of Vijay's Kaavalan & Rajini's Ejaman

ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்..

ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட். சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ என அழைத்த மீனா வளர்ந்து வந்து மீண்டும் ரஜினிக்கே ஜோடியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் பயன்படுத்திய வெள்ளை வேஷ்டி காஸ்ட்டியூம் அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. வல்லவராயன், வானவராயன் போன்ற கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவின் அக்மார்க் அடையாளங்களாக அமைந்தன.

‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ பாடல் மாபெரும் ஹிட்டானது. ஏவி.எம் நிறுவன தயாரிப்புகளில் இந்தப் படத்திற்கு தனித்த பெயர் கிடைத்தது.

இந்நிலையில் ‘எஜமான்’ படம் வரும் 12-ந்தேதி ரீ-ரிலீஸாகிறது. ரஜினியின் ‘எஜமான்’ வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மேலும் விஜய், அசின் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘காவலன்’ திரைப்படம் வருகிற 5-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாடி கார்டின்’ ரீமேக் படமாக ‘காவலன்’ வெளியானது. இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் வடிவேலு காமெடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.