அஜித் குறித்து சிப்ஸ் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட்.இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட்.
ரஜினி சாருக்கு அப்புறம் அஜித் சாருக்கு அந்த பொறுமையும் நிதானமும் இருக்கிறது நான் மத்தவங்களை விட ஸ்பெஷல் என்ற ஒரு எண்ணம் வராமல் இருக்கிறதே எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் யாருடைய துணையும் இல்லாமல் அவரது படத்தின் மூலம் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார் ஆனால் இதுவரைக்கும் அதை மறக்காமல் இருந்து வருகிறார் அஜித் சாருக்கு இருக்கிற தைரியம் வேறு யாருக்கும் இருக்காது என்று சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


