தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தினரிடம் நீங்க என்ன பொறுத்த வரைக்கும் எல்லாரும் இங்கே வேலைக்காரங்க தான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி அம்மாச்சி இடம் எனக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்படுற அவர நல்லபடியா பார்த்துக் கொள்ளும் அவருக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என்று சொல்ல மாதவி மறைந்திருந்து கேட்கிறார்.
நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருந்தா மட்டும் போதாது குடும்பமா மாறனும் அதற்கு குழந்தை வேணும் என அம்மாச்சி சொல்லுகிறார். இதைக் கேட்டு மாதவி அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


