தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று பேச்சு இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இரண்டு சீரியல் பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திவ்யா கணேஷ் மற்றும் ரோஜா சீரியலில் நடித்த சிபு சூரியன் ஆகியோரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திவ்யா கணேஷ் அன்னம் சீரியலில் நடித்து வரும் நிலையில் அந்தத் தொடரில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


