தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க விசாரிச்சு தான் ஆகணும் அருண் என்று சொல்லிவிடுகிறார் உடனே அந்த திருடன் பணத்தை எடுத்துட்டு போனதுக்கு என்னோட வைஃப் என்ன பண்ணுவாங்க எடுத்துட்டு போன பணத்தை எல்லாத்துக்கும் செலவு கூட பண்ணி இருப்பாங்க என்று சொல்ல திருடர்களும் உள்ள கிடைக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முத்து கண்டுபிடிச்சாச்சு என வந்து நிற்கிறார்.
போலீஸ்காரருடன் வந்து விட்டு நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆனா எங்க கிட்ட இருந்து திருடன் தப்பிச்சு போயிட்டானுங்க என்று சொல்லிவிடுகிறார் உடனே சீதா கண் கலங்கி பார்க்கிறார். இது மட்டும் இல்லாம சீதா கிட்ட இந்த மேனேஜர் மன்னிப்பு கேட்கணும் என்று சொல்ல நான் எதுக்கு கேக்கணும் அதான் சொல்லுகிறார் சீதா இந்த ஹாஸ்பிடல்ல நேர்மையா வேலை பார்த்துக்கிட்டு இருக்கா அவ மேல இந்த மாதிரி ஒரு பழி போட்டதுக்காக தான் என்று சொல்லுகிறார் ஒரு நேர்மையான பொண்ணு அவ நேர்மையா தான் இந்த ஹாஸ்பிடல்ல வேலை பாக்குறா என்று சொல்லுகிறார் உடனே மேனேஜரும் தெரியாம பணம் காணாமல் போன டென்ஷன்ல சொல்லிட்டோமா சாரி சீதா அதே மாதிரி இந்த ஹாஸ்பிடலையே நீ கண்டினியூ பண்ணலாம் என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார் சரி சீதாவுக்கு நீங்க யாரு என்று கேட்க நலன் விரும்பின்னு வச்சுக்கோங்களேன் என்று சொல்லிவிட்டு முத்து சென்று விடுகிறார் மறுபக்கம் ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் சாப்பிட வர மனோஜ் ஒரு வீடியோல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சப்பாத்தி ஊட்டுகிற வீடியோவை பார்த்த அதே மாதிரி நம்மள ஊட்டிக்கலாமா என்று கேட்க பிறகு இருவரும் உட்கார்ந்து மாறி மாறி சப்பாத்தி சாப்பிடுகின்றனர்.
இதனை கவனித்த விஜயா கோபப்பட்டு உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவில்லையா எதுக்காகவும் சாப்பிட மாட்டாளா நீ எதுக்கு ஊட்டி விட்டுகிட்டு இருக்க என்று சொல்லிவிட்டு தனித்தனியாக சாப்பிட சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை குடும்பத்தினரிடம் சொல்லுகிறார். ஒரு வழியாக சீதா மேல எந்த தப்பும் இல்லைன்னு முடிவாயிடுச்சு இல்ல ரொம்ப சந்தோஷம் அந்த ஆட்டோக்காரன் என்ன பண்ண என்று கேட்க என்னப்பா சொல்றது அவர் குழந்தை குட்டிக்காரரா இருக்காரு என்னால எதுவும் பண்ண முடியல அதனால தப்பிச்சிட்டார் என்று பொய் சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார்.
உண்மைதான மறைச்சிருக்க நல்லதுக்காக உண்மையை மறக்க எனது தப்பில்ல என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு நீங்க போய் சாப்பிடுங்கன்னு சொல்லிவிட்டு அண்ணாமலை சென்றுவிட விஜயாவும் சென்று விடுகிறார் பிறகு சாப்பிட உட்கார சப்பாத்தி இல்லாமல் இருக்கிறது எங்கடா எனக்கு சப்பாத்திய காணும் என்று சொல்ல மனோஜ் முழிக்கிறார். ரவியும் ஸ்ருதியும் நீங்க சாப்டீங்களா நெனச்சி நாங்களும் சாப்பிட்டோம் என சொன்ன அடுத்தவங்கள பத்தி நினைச்சா தான் என்ன என்று ரவி கேட்கிறார் நீ முதல்ல பொண்டாட்டிய பத்தி நினைக்க மாட்டேன் அடுத்தவன பத்தி நினைப்பேன் என்று ஸ்ருதி சொல்ல இப்ப நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று முத்து கேட்கிறார் உடனே கொஞ்ச நேரத்தில் மீனா ஹார்ட் சப்பாத்தி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் இதனை பார்த்த முத்து என்ன மீனா வித்தியாசமா இருக்கு என்று கேட்கிறார் பிறகு சுருதி எது நல்ல ஐடியாவா இருக்கு என்னோட ரெஸ்டாரன்ட் எல்லாம் இது மாதிரி நான் ரெடி பண்ண போறேன் என்று சொல்ல ரவியும் நானும் ட்ரை பண்றேன் என சொல்லுகிறார் உடனே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட விஜயா வந்து எனது இதெல்லாம் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்கீங்களா என்று திட்டிவிட்டு சென்று விடுகிறார் பிறகு முத்துவும் மீனாவும் மாறி மாறி பாசத்தோடு சப்பாத்தி விட்டு விடுகின்றனர்.
மறுநாள் மீனாவின் தம்பி சத்யா கார் செட்டுக்கு வந்து செல்வத்திடம் மாமா தப்பா நினைச்சுக்கிட்டாரு அவரு என்கிட்ட பேசல என்று சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் பார்த்து முத்து வருகிறார். முத்து சத்யாவிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு சத்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


