முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் கல்யாண ஏற்பாடுகள் கோவிலில் நடந்து கொண்டிருக்க மனோஜ் ரோகிணி முத்துமீனா என அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மகேஸ்வரி ரோகினி இடம் முத்துமீனதா இல்ல வேலையும் செஞ்சுகிட்டு இருக்காங்க என்று சொல்ல அவங்க ஏதும் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிட்டாங்களாம் அப்போலிருந்து என்கிட்ட அவங்கள தூக்கி வச்சு தான் பேசிக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார்.பிறகு நீ உங்க அம்மாவ கல்யாணத்துக்கு வர சொல்லி இருக்கலாம் பாவம் அவங்க என்று சொல்ல அவங்க வந்தா என்னோட கல்யாண வாழ்க்கை முடிஞ்சிடும் என்று ரோகினி சொல்லுகிறார் பிறகு மீனா வித்யாவிற்கு ஜூஸ் கொடுக்கப் போக கொஞ்ச நேரத்தில் கல்யாணத்திற்கு ரோகிணிக்கு தெரிந்தவர்கள் வருகின்றனர் அதாவது ரோகினியின் முதல் கணவரின் சொந்தக்காரப் பெண் வர அவர ரோகினியை பார்த்து விடுகிறார்.
உடனே அவரது கணவரிடம் இந்த பொண்ணு கல்யாணிய ஞாபகம் இருக்கா சேகர் வைஃப் என்று சொல்லுகிறார். பிறகு ரோகினியும் அவர்களை பார்த்துவிட அவர் பயத்தில் உச்சத்தில் இருக்கிறார். எப்படியாவது இவரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று மகேஸ்வரி இடம் அவங்க வந்து என்கிட்ட பேசும்போது என்ன கூட்டிட்டு போய்டு என்று சொல்ல அதேபோல் மகேஸ்வரியும் செய்கிறார். உடனே வழியில் மீனாவை பார்த்து அந்த பச்சை கலர் புடவை கட்டி இருந்த பொண்ணு யாருன்னு கேட்க அவங்க ரோகினி அவங்க தான் என பேச வர அதற்குள் மீனாவை கூப்பிட்டு விட அவர் சென்று விடுகிறார்.
மீண்டும் மகேஸ்வரி இடம் அவங்க பேர் கல்யாணி தான ஏன் ரோகினு சொல்றீங்க ஏதாவது செல்ல பேரா என்று கேட்க அப்படி எல்லாம் இல்ல உங்க பேரு ரோகிணி தான் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு ரோகிணி வர அவரிடமே கேட்க அவரும் அப்புறம் பேசலாம் என சொல்லி சமாளித்துவிட்டு வருகிறார்.பிறகு ரெண்டு பேரும் மாலை மாற்றிக் கொண்டு தாலி கட்ட போகும் நேரத்தில் முருகன் வித்யா இருவரும் முத்து மீனாவை தாலி எடுத்துக் கொடுக்க சொல்ல அவர்களும் எடுத்துக் கொடுக்க தாலி கட்டி முடிக்கின்றனர். உடனே மனோஜை ரோகினி சரி நீ டீலரை பாக்கணும்னு சொன்ன இல்ல நீ கிளம்பு மனோஜ் நான் சொல்லிட்டு வரேன்னு அனுப்பி விடுகிறார். ரோகினி சொந்தக்காரப் பெண்ணிடம் பேசும் போது மீனா வந்து போட்டோ எடுக்க கூப்பிட நான் வித்யாவோட சித்திய சாப்பிட கூட்டிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிவிட்டு அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு வித்யா ரோகினி எங்கே என்று கேட்க அவங்க உங்க சித்திய சாப்பாடு சாப்பிட கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல எனக்கு சித்தி நீ யாருமே இல்லையே என வித்யா சொன்னவுடன் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. உடனே ரோகிணி அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று உன்னை எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற உங்க சொந்தமே வேண்டாம் என்று நான் வேலைக்கு வந்துட்டேன் நான் எங்க போன யார் கூட இருந்தா உனக்கு என்ன என்று திட்ட அதற்கு அந்த பெண்மணி உன்ன போய் எப்படி இருக்குன்னு கேட்க வந்தேன் பாரு நீ எப்படி இருந்தா எனக்கு என்ன என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு ரோகிணி வந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டில் இருக்க செல்வம் எல்லா போட்டோவும் அனுப்பிட்டேன்னு சொல்லு முத்து மீனாவை கூப்பிட்டு முருகன் கல்யாண போட்டோவெல்லாம் செல்வம் அனுப்பி இருக்கான் பாக்கலாம் என சொல்ல இருவரும் பார்க்கின்றனர் அப்போது பார்லர் அம்மா என்ன இவங்க கிட்ட பேசிகிட்டு இருக்கு என்று சொல்ல மீனா அவங்க என்னமோ டென்ஷனா பேசிகிட்டு இருந்தாங்க சித்தியின்னு சொன்னாங்க அப்புறம் கேட்டா வித்யாவை சித்தி இல்லைன்னு சொல்றாங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்லுகிறார் எதுனா கேட்டா நம்மளுக்கு தலையிடாதீங்க ன்னு சொல்லுவாங்க நம்மளுக்கு அந்த கதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் போட்டோவை பார்த்து கொண்டு இருக்க முத்து ரோகினி அம்மாவை பார்த்து விடுகிறார் இவங்களும் கல்யாணத்துக்கு வந்திருக்காங்க நம்ம பாக்கவே இல்ல இவங்க எதுக்கு கல்யாணத்துக்கு வரணும் க்ரிஷ் பாட்டி விஷயத்துல ஏதோ ஒரு மர்மம் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார் ரோகினி அதனை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஒருவேளை முருகனுக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்களா என்று கேட்க சரி நான் விசாரிச்சு பாக்குறேன் என முத்து சொல்லுகிறார் பிறகு ரோகிணி அம்மாவுக்கு போன் போட்டு என்ன பேசுகிறார்? அதற்கு அவர் பதில் என்ன? அருண் முத்துக்கு நடுவில் என்ன உருவாகிறது?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
