இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நியாயம்னு ஒன்னு இருக்கு நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க என்று சொல்ல இப்போ சாப்பிடணுமா வேண்டாமா என சபரி அவரிடம் வாக்குவாதம் செய்ய அவங்க அவங்களோட பர்சனல் வெஞ்சன்சை சாப்பாடு மேல தான் காட்டுறாங்க ஆள பாத்து சாப்பாடு கொடுக்குறாங்க என்று சொல்லுகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கனி பார்வதி இடம் சூப்பர் டீலக்ஸ் இல் இருக்கிறவங்களுக்கு கொம்பு முளைக்கல என்று கூறியுள்ளார். நீங்க ஒரு விஷயம் அநியாயமா பண்ணிட்டு அதை யாருமே கேட்க கூடாதுன்னு நினைச்சீங்கன்னா அப்படியெல்லாம் இருக்க முடியாது என்று சொல்லுகிறார். அறிவு இருக்கிறவங்களுக்கு புத்தி இருக்கிறவங்களுக்கு சொல்றது உரைக்கும் ஆனா உங்க கிட்ட பேசுறது சுவத்து கிட்ட பேசுற மாதிரி தான் என்று சொல்லுகிறார் ஆனால் தலையை ஆட்டிக் கொண்டு பார்வதி அமைதியாக இருக்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/vijaytelevision/status/1977623067401625653