Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயாவிடம் பேசிய ஸ்ருதியின் அம்மா அப்பா, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial promo update 13-10-25

ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா நடந்து கொண்ட விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல இதுக்காக தான் நான் அந்த கமிஷனர் கிட்ட எல்லாமே அருண் பண்ணதா சொல்ல சொன்னேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது இதுக்காக தான் சீதா கோவிச்சுக்கிட்டு இருக்காளா நீ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவ யார் சொன்னாலும் இப்ப கேக்குற நிலைமை இல்ல. அம்மா தான் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே மீனா அப்படி எல்லாம் இருந்தா நான் டெய்லி அம்மா வீட்டுக்கு தான் போகணும் என்று சொன்ன முத்து நான் உன்னை என்ன பண்ண அருண் மாதிரி தான் பேசிகிட்டு இருக்கேன் என்று கேட்க தினமும் எனக்கு பிடிக்காத விஷயத்தை தான் பண்ணுவீங்க என்று சொல்லுகிறார்.

நான் என்ன பண்ண என்று கேட்க குடுப்பீங்களே என்று சொல்லுகிறார் அதுவும் எப்பயாவது ஒரு வாட்டி தான் குடிப்பேன் என்று சொன்னால் பிறகு மீனா இருந்தா போதும் சரி நீயும் பேக் தூக்கிக்கிட்டு போ என்று கத்த அண்ணாமலை வருகிறார் என்ன முத்து சத்தம் என்று கேட்க ஒன்னும் இல்லபா சும்மா நான் மீனா கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அவ்வளவு சத்தமா பேசுவியா என்று சொல்ல,சரியா காது கேட்க மாட்டேங்குது என்று சொல்லி சமாளித்துவிட்டு அண்ணாமலையை அனுப்பி விடுகிறார். பிறகு இருவரும் சமாதானமாக முத்து மீனாவை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு படுத்துக் கொள்கிறார்.

மறுபக்கம் ரவி ரூமுக்கு வர ஸ்ருதி கோபமாக பேசி சண்டை போடுகிறார்.ஏன் இப்பதான் உன்னோட மேடம் அனுப்பி வெச்சாங்களா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி எவ்வளவு கஷ்டப்பட்ட கட்டுப்ப நீ பாட்டுக்கு அவ பின்னாடி போய்க்கிட்டு இருக்க இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த அவ கூடவே போக வேண்டியதுதான் என்று கேட்க எதுவும் தெரியாமல் பேசாம இருக்கறது உங்க அம்மா அப்பா என்ன பேசினாலும் தெரியுமா என்று கேட்டால் அவங்க என்ன வேணா பேசி இருக்கட்டும் என் கூட இல்லாமல் எதுக்கு போன என்று கேட்க ரவியின் பேச்சை கேட்க மறுக்கிறார். உடனே உன் கிட்ட பேசறது வேஸ்ட் என்று சொல்லிவிட்டு ரவி படுக்கச் சென்று விடுகிறார். மறுபக்கம் பார்வதி வீட்டுக்கு சிவன் வருகிறார் நேரடியாக கிச்சனுக்கு சென்ற சிவன் கையில் சூப்புடன் வருகிறார் நீங்க பேசும்போது இரும்பு நீங்க அதனால தான் என் கையால நானே சூப் போட்டு எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லிக் கொடுக்கிறார் நான் உங்ககிட்ட கேட்கவே இல்லையே என்று சொல்ல உங்களுக்காக பண்றதுல எனக்கு சந்தோசம் தான் என்று சொல்லுகிறார்.

சூப் குடிக்கும் போது பார்வதிக்கு புறையற சிவன் தலையில் தட்டி விட அந்த நேரம் பார்த்து விஜயை வருகிறார் பார்வதி என சத்தம் போட இவர் இங்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு என்று கேட்கிறார் பார்வதிக்கு போன்ல பேசும் போது இருமல் வந்தது அதனால சூப் எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லுகிறார் பார்வதி கேட்டால் என்று கேட்க இல்ல இல்ல நானே தான் எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல ஏற்கனவே நான் டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சேன் அதுவும் இதே மாதிரி ஒரு பிரச்சனை வந்தது. இப்போ இது மாதிரி எல்லாம் பண்ணாதீங்க என்று கண்டித்து அனுப்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஸ்ருதியின் அப்பா அம்மா வந்து விஜயாவிடம் பேசுகின்றனர்.

ஸ்ருதிக்கு கோவம் வந்தா அவ என்ன முடிவெடுப்பானே தெரியாது இந்த வாழ்க்கையை ஸ்ருதி தேர்ந்தெடுத்துக்கிட்டா ஆனால் நல்ல மாப்பிள்ளையா தான் எங்களுக்கு கிடைச்சிருக்காரு ஆனா மாப்பிள்ளை நடந்து கொள்வதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல சுத்தி ரொம்ப கஷ்டப்படுத்துறாரு என்று சொல்ல ரவி அவனோட சொந்த உழைப்பில் ரெஸ்டாரன்ட் வைக்கணும்னு ஆசைப்படுறான் அவ்வளவுதான் என்ன சொல்ல நாங்க சேர்த்து வச்சிருக்க சொத்து எல்லாமே எங்களோட ஒரே பொண்ணுக்காக தான் அப்படி இருக்கும்போது ஏன் கஷ்டப்படணும் என்று கேட்கிறார். நீங்க கொஞ்சம் சொல்லி புரிய வைங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர் பிறகு வீட்டில் ரோகினி மனோஜ் என்ன பேசுகின்றனர்?முத்து என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial promo update 13-10-25
siragadikka asai serial promo update 13-10-25