Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

moondru mudichu serial promo update 03-10-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அவன் எல்லாமே திட்டம் போட்டு பண்ணி இருக்கான் உங்களுக்கு தெரியலையா என்று கேட்கிறார். ஏற்கனவே நந்தினி செய்யாத தப்புக்கு பழி போட்டாங்க இப்போ என் மேலயா அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று சொல்லுகிறார். நந்தினி அவர் அப்படியெல்லாம் எதுவும் செய்யல எனக்கு பேச வர உடனே சுந்தரவல்லி புருஷனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு பேசுறியா ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க என்று அனுப்பி விடுகிறார். பிறகு நந்தினி, சூர்யாவும் வீட்டுக்கு வர நான் கேட்கிறேன் நீ தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க ஏதாவது பண்ணுங்க என்று கேட்க, என்ன நந்தினி பேசுற என்ன பாத்து இப்படி கேக்குற எங்க அம்மாவ திட்டி இருக்க பேசி இருக்கேன் ஆனால் முதுகு பின்னாடி எதுவும் செய்ய மாட்டேன் உனக்கு தெரியாதா என்று கேட்கிறார். எதையுமே எனக்கு நேருக்கு நேரா பேசி செஞ்சு தான் பழக்கம் என்று சொல்ல நந்தினி மன்னிப்பு கேட்கிறார். இதை யார் சார் செஞ்சிருக்காங்க அவங்களோட எதிரி யாரோ திட்டம் போட்டு செஞ்சிருக்காங்க என்று சொல்ல திட்டம் போட்டு இருக்காங்க ஆனா அந்த திட்டம் அவங்களுக்கு இல்ல அம்மாவ பிளான் பண்ணி இருந்தா அவங்க ஆன் பண்ண மிஷினை தான் கரண்ட் ஷாக் வைத்திருப்பார்கள் நீ ஆன் பண்ண வேண்டிய மிஷின்ல பண்ணி இருக்காங்க உன்ன சாகடிக்க பிளான் போட்டு இருக்காங்க என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறார்.

யாரா இருக்கும்னு கண்டுபிடிக்கிறேன் என்று சூர்யா சொல்லுகிறார். பிறகு சுந்தரவல்லி ஹாஸ்பிடலில் இருந்து வர நந்தினி ஆரத்தி எடுக்க வர தட்டை தூக்கி விசிறி அடித்துவிட்டு புருஷனும் பொண்டாட்டியும் நடிக்கிறீங்களா என்று கேட்கிறார். உடனே சூர்யா வந்து தேவையில்லாம என் பொண்டாட்டி மேல பழி போடுறவங்களா அமைதியா இருக்க சொல்லுங்க என்று சொன்ன என்னடா பண்ணுவ என்னை சாகடிக்கவே துணிந்து விட்டான் என்று சொல்லி கோபப்பட, மாதவியும் சுரேகாவும் சுந்தரவல்லிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இவன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுவா ஆனா எனக்கு யார் சப்போர்ட் பண்ணுவாங்க இப்ப கூட நான் சொல்றேன் இவங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் ஷாக் கொடுத்தாங்க என்று சொல்ல சூர்யா கோபப்பட்டு இவங்களுக்கு அவ்வளவு தான் லிமிட் என சொல்லுகிறார். நீங்க பேசறதுல கொஞ்சம் கூட நியாயம் இருக்கா நான் பிளான் பண்ணி பண்ணதா இருந்தா முதல் மிஷின்ல தானே பண்ணி இருப்பாங்க இரண்டாவது மிஷின் நந்தினி ஆன் பண்ண வேண்டிய மிஷின்ல தான் கரண்ட் ஷாக் கொடுத்திருக்காங்க. உங்களை யாராவது இரண்டாவது மிஷின் ஆன் பண்ண கூப்பிட்டாங்களா என்று கேட்கிறார். இவங்க ஆன் பண்ணலனா நந்தினி தான் ஆன் பண்ணி இருப்பா அவளுக்கு தான் ஷாக் அடிச்சிருக்கோம். இப்பவும் உறுதியா சொல்ற அதே நந்தினிக்காக வச்ச சாத்தான் என்ன சூர்யா உறுதியாக சொல்லுகிறார்

நீங்க சொல்லி உங்க பொண்ணுங்க செஞ்சிருக்கணும் இல்லனா உங்க பொண்ணுங்க மட்டும் தனியா செஞ்சிருக்கணும் என்று சொல்ல சுரேகாவும் மாதவியும் கோபப்பட்டு சூர்யாவை திட்ட, நீங்க எல்லா கேடுகெட்ட வேலையும் செஞ்சவங்க தானே என்று சொல்லுகிறார்.நீங்க எல்லாம் யாரு எப்படி யோசிப்பீங்க என்ன பண்ணுவீங்கன்னு எல்லாமே தெரியும் என்று சொல்லுகிறார். உடனே போதும் நிறுத்துங்கள் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். முதல்ல இந்த வீட்ல அந்த வேலைக்காரி இருக்கணுமா இல்ல நான் இருக்கணுமா என்று கேட்க அவ இருப்பா நீங்க வெளிய போங்க என்று சொல்ல எது சுந்தரவளியோட சாம்ராஜ்யம் என சுந்தரவல்லி சொல்லுகிறார் இது சூர்யாவோட சாம்ராஜ்யம் நான் ராஜா என்றால் நந்தினி தான் ராணி இவை என் பொண்டாட்டி இங்கே இருக்க விருப்பம் இருந்தா இருங்க இல்லனா போய்க்கிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு நந்தினியை உள்ளே அழைத்துச் சொல்கிறார். பிறகு அனைவரும் உள்ளே சென்று விடுகின்றனர்.

மறுபக்கம் சுந்தரவல்லி சூர்யா பேசியது நினைத்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார். என்னாச்சு சுந்தரவல்லி என்று கேட்க இந்த வீட்டிலேயே என்னை யாரு கொல்ல பார்த்து இருப்பாங்க அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா என்று சொல்லிக் கண் கலங்குகிறார். இது எதர்ச்சியா நடந்தது கிடையாது வேணும்னே செஞ்சிருக்காங்க. அப்போ நீ இன்னும் சூர்யா சொன்ன தான் நம்பளையா என்று கேட்டுவிட்டு அருணாச்சலம் சூர்யா சொன்ன விஷயத்தை மீண்டும் சுந்தரவல்லிக்கு சொல்லி விளக்கம் கொடுக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் பெத்த பொண்ணுக்கு நீங்களே சாபம் கொடுக்கிறீர்களா என்று கேட்க நான் அப்படியெல்லாம் சொல்லல அன்னைக்கே பொறுமையா இருந்திருந்தால் இது மாதிரி நடந்திருக்காது இன்னும் மகமாயி என்ன பண்ண காத்திருக்காலோ தெரியல என்ற சொல்ல, சூர்யா வருகிறார் என்னாச்சு டாடி என்று கேட்க சுரேகாவிற்கு அம்மா போட்டு இருக்கு என்று சொல்லுகிறார் உடனே சூர்யா சுரேகாவை பார்த்துவிட்டு உடனே கத்தி சந்தோஷம் பட்டு சிரிக்கிறார் சிக்கன் பர்கர் சிக்கன் தந்தூரியா ஷார்ப்பு நெக்ஸ்ட் நீதான் கடவுள் இருக்கான் குமாரு என சந்தோஷமாக சிரிக்கிறார். பிரியாணி வேணுமா பிரியாணி உங்க எல்லாருக்கும் தந்தூரி சிக்கன் ஆர்டர் பண்ணட்டுமா என்று கேட்கிறார். உடனே அருணாச்சலம் எரியுர நெருப்புலஎன்னை உத்தர என்று கேட்க என் பொண்டாட்டிக்கு இப்படி தானே பண்ணுவாங்க நான் அப்படிதான் பண்ணுவேன் என சொல்லுகிறார் பிறகு ஆர்டர் பண்ணவா ஆர்டர் பண்ணவா என்று வெறுப்பேத்த அருணாச்சலம் சூர்யாவை அழைத்துச் சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial promo update 03-10-25
moondru mudichu serial promo update 03-10-25