OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார்.
அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி இவரது நடிப்பில் OG என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகிய 3 நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
