தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் விஜி அருணாச்சலத்திடம் சூர்யா அண்ணனோட வேண்டுதலுக்கு ஏதாவது ஒரு பலன் இருந்தே ஆகணும் என்று சொல்ல மறுபக்கம் சுந்தரவல்லி இடம் மாதவி நீங்க பிச்சைக்காரங்க விரட்டணும்னு பேச ஆரம்பிச்சீங்கன்னா சூர்யா அமைதியா இருப்பானு நினைக்கிறீங்களா என்று கேட்கிறார்.
உடனே போலீஸ்காரர் எல்லோரையும் அடித்து விரட்ட சூர்யா எங்க மேல பொய்யா கம்ப்ளைன்ட் கொடுத்தது யாருன்னு எங்களுக்கு தெரியணும் என பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாக நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
