Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

actress samantha latest speech viral

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம், நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் சமந்தா நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடங்களில் விவாகரத்தும் பெற்ற தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சமந்தா.

ஒரு தாயாக வேண்டும் என்ற என் கனவு இன்னும் அப்படியே தான் உள்ளது அந்த அழகான அனுபவத்தை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன் ஒரு பெண் நினைத்தால் அவள் தாயாக முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவும் கிடையாது தாய்மை என்பது ஒரு வரம் எனக்கு கண்டிப்பாக அது கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress samantha latest speech viral
actress samantha latest speech viral