விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி ,ஆயுத எழுத்து, திருப்பாச்சி, நந்து, ஆறு போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய த்ரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அவருடைய புதிய பயணத்திற்கு குட்லக் எனவும் அவருக்கு என்ன கனவாக இருந்தாலும்,நிஜத்தில் நடக்க வேண்டும் அதற்காக அவருக்கு தகுதி இருக்கிறது என்று கூறியுள்ளார் இவரது இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திரிஷா விஜயுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி, போன்ற படங்களில் நடித்திருந்தார் கடைசியாக லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
